காவேரிப்பாக்கம் அருகே புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா

காவேரிப்பாக்கம் அருகே புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா
X
புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கரிவேடு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 57 ஆயி ரம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தாஸ் தலைமை தாங்கி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஹமத்பாஷா, சிவப்பிரகாசம், ஒன்றியக்குழு உறுப்பினர் குமாரி வில்லாளன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story