தாணுமாலய சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா இன்று தொடக்கம்

தாணுமாலய சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா இன்று தொடக்கம்
X
சுசீந்திரம்
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிக்கும் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கும் வருடம் தோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறும். இந்த ஆண்டு மாசி திருக்கல்யாண விழா இன்று 4-ம் தேதி  தொடங்க உள்ளது. தொடர்ந்து பன்னிரண்டாம் தேதி வரை 9 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.      திருவிழாவின்போது தினமும் காலை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் காலை மாலை நேரத்தில் வாகன பவனி போன்றவை நடைபெறும். வருகின்ற 11ஆம் தேதி எட்டாம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு பூப்புனித நீராட்டு விழாவும், இரவு 7:30 மணிக்கு கோவிலில் உள்ள அலங்காரம் மண்டபத்தில் வைத்து சுவாமிக்கும் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.       இதனைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இங்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் ,  திருநீறு, சந்தனம் ஆகிவை பிரசாதமாக வழங்கப்படும்.12-ம் தேதி மாலை  ஆறு மணிக்கு சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேரில் எழுந்தருளி ரத வீதி வலம் வரும் தேரோட்டம் நடைபெறுகிறது.
Next Story