நகை சீட்டு நடத்தி பணம் வழங்காத நகை கடைக்கு அபராதம்

நகை சீட்டு நடத்தி பணம் வழங்காத நகை கடைக்கு அபராதம்
X
நாகர்கோவில்
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீ ராம்.  வக்கீலான  இவர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் மாதாந்திர நகைச் சீட்டில் இணைந்து மாதந்தோறும் ஐந்தாயிரம் கட்டி வந்துள்ளார். இவர் நான்கு மாதம் பணம் கட்டியுள்ளார். நான்கு மாதம் பணம் கட்டிய நிலையில் அந்த நகை கடை நாகர்கோவிலில் பூட்டப்பட்டது. நகைக்கடை நிர்வாகத்தை ஸ்ரீராம் தொடர்பு கொண்டபோது, சீட்டு பணத்தை நெல்லையில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.       உடனே கட்டிய பணத்திற்கு உண்டான நகையை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 11 மாதம் பணம் கட்டினால் தான் நகை வழங்கப்படும். நீங்கள் கட்டிய நான்கு மாதத்திற்கான பணம் ₹20,000  வழங்கப்படும் என கூறியுள்ளனர். கட்டிய பணத்திற்கு உண்டான வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் என கூறி ஸ்ரீராம்  நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நகை கடை நிர்வாகம் 20 ஆயிரத்துக்கான காசோலை மட்டும் அனுப்பி உள்ளது.      இதையடுத்து  ஸ்ரீராம் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதி 6 ன்றம் பாதிக்கப்பட்ட வக்கீல் ஸ்ரீ ராமுக்கு ரூ. 20,000 மற்றும்  வழக்கு செலவுக்கு ஐந்தாயிரம் என மொத்தம் 25 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர். இந்த தொகை இரண்டு மாதத்திற்குள் செலுத்துமாறு உத்தரவில் கூறியுள்ளனர்.
Next Story