முதல்வர் பிறந்த தினம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து

முதல்வர் பிறந்த தினம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து
X
முதல்வர் பிறந்த தினம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரச மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த தினமான மார்ச் 1ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று திருச்செங்கோடு அரச மருத்துவமனையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் மூர்த்தி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். சேலம் மாவட்டம் கொங்கணபுரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரி வெங்கடேசன் தர்மபுரியைச் சேர்ந்த கோகிலா சச்சின் ஆகிய தம்பதிகளுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது அந்த குழந்தைகளுக்கு உடைகள் தமிழக அரசின் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டது திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகள் மற்றும் தாய்மார்களுக்கு பால் ரொட்டி ஆகியவை வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு திமுக நகர செயலாளர் கார்த்திகேயன்,திருச்செங்கோடு திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் நடேசன் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்
Next Story