இளைஞர் இறப்பில் அலட்சியம் காட்டும் காவல்துறையை கண்டித்து சாலை மறியல்

தலித் இளைஞர் மர்மமான முறையில் இறப்பு நீதி கேட்க உறவினர்கள் விடுதலை சிறுத்தை கட்சியினர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு அருகே நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே தலித் இளைஞர் மர்மமான முறையில் இறப்பு நீதி கேட்க உறவினர்கள் விடுதலை சிறுத்தை கட்சியினர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு அருகே நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு போலீசார் பேச்சு வார்த்தை. பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் (ரோவர் கல்லூரியில்) கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ்ச்செருவாய் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை த/பெ வெங்கடாசலம், என்பவர் ஆடு மேய்க்கும் தொழிலில் பணிபுரிந்து வந்திருக்கிறார் அங்கு பணியின் போது நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என உறவினர்கள் சாட்டினார். இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கல்வி நிறுவனத்தினர் உறவினர்களிடம் சொல்லி உள்ளனர் இறந்த தங்கதுரை அவரது உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது இறந்து போன தங்கதுரை என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அவருக்கு ஊனமுற்ற மனைவிஅஞ்சலை, மகன்கள் ஆனந்தகுமார்,அரவிந், மகள் வர்ஷிகா,ஆகியோர் உள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் இறந்த தங்கதுரை குடும்பத்திற்கு எந்த ஒரு தகவலும் அளிக்காததால் இது குறித்து உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்கதுரை இறப்பில் சந்தேகம் உள்ளது. எந்த ஒரு பதிலும் குடும்பத்தாரிடம் தெரிவிக்கவில்லை இருந்தபோதிலும் தனியார் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்த ஊழியர் இறந்து பல மணி நேரம் ஆகியும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கின்றனர் ஆகவே பெரம்பலூர் காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டு மென பெரம்பலூர் மேற்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் உறவினர்களும் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு அருகே சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் ஈடுபட்டனர் இறந்த தங்கதுரை இறப்புக்கு நியாயம் கேட்டு தற்போது பெரம்பலூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஆரோக்கியசாமி தலைமையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Next Story