*ஆளுநர் ஆர்.என்.ரவியை தாக்கி பேசிய தி.க தலைவர் வீரமணிசம்பளம் வாங்கிக் கொண்டு எதிரி கட்சியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு*

X
அரியலூர், மார்ச்.4- அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாள் விழா மற்றும் ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ கா.சொ. கணேசன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் வரவேற்புரையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசும் போது சில பேர் சொல்லுவாங்க வாரிசு அரசியல் என்று இந்த வாரிசுகள் தான் எங்களது பொது வாழ்க்கைக்கு பலமே. அதுதான் மிக முக்கியமானது. அப்பா ஒரு கட்சி பிள்ளை ஒரு கட்சி என்று போனால் கொள்கை வெற்றி அடையவில்லை என சொல்வார்கள் ஆனால் அப்பா மகன் பேரன் எல்லாமே கொள்கையின் அடிப்படையில் வாரிசாக இருக்கிறார்கள் இங்க நம்ம சம்பளத்தை வாங்கிட்டு அரசாங்கத்துக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்தி கொண்டிருக்கிறார் ஒரு வடநாட்டிலிருந்து வந்த ஒரு ஆசாமி கவர்னர். இங்கே நம்ம வரிப்பணத்தில் இருந்து மாநில அரசு கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு எதிர்க்கட்சி தலைவராக இவர் ஆயிட்டார் எதிர்க்கட்சி கூட அல்ல அந்த வார்த்தை கூட சரியில்லை எதிரி கட்சி தலைவரா இருக்கார் அரசை விமர்சியுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே போய் ஆர்எஸ்எஸ் கொடியை போட்டு கொண்டு அங்கே செய்யவேண்டும் அதுதான் மிக முக்கியம் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது இந்த அரசாங்கத்தினுடைய கொள்கையை விமர்சிப்பதற்கு துளி கூட இந்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை ஒரு அம்மாச்சியாக இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்எஸ்எஸ்க்கு எடுபுடியாக டெல்லி அரசுனுடைய ஏஜென்ட்டா இருப்பது பத்தி எங்களுக்கு கவலை இல்லை நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவது என்று சொன்னால் அதை எதிர்த்து சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை பெற்றிருக்கும் இயக்கமாக உள்ளோம் கொள்கை அடிப்படையில் இணைந்த திமுக கூட்டணி நல்ல கூட்டணி. இந்த கூட்டணியை அவர் வருவார் இவர் வருவார் என கூறுகிறார்கள் எவரும் வர மாட்டார்கள் பல பேர் தான் வந்து கொண்டுள்ளார்கள். ஆகவே தான் திமுக கூட்டணியை அசைத்து கூட பார்க்க முடியாது இது மணல் வீடு அல்ல மெழுகு பொம்மை அல்ல இது ஒரு இரும்பு கோட்டை எக்கு கோட்டை கடற்பாறை. கடப்பாறை இல்லை கடப்பாறை என்பது காவிக்கு தான் சொந்தம் அவர்களுக்கு இடிப்பதே வேலை இடித்து கல்லை தூக்கிக் கொண்டு போவது காவிகளின் வேலை அந்தக் கல்லுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்தார் நமது துணை முதலமைச்சர் ஒரே கல்லை தூக்கி தான் வெற்றியை பெற்றுள்ளோம் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரே செங்கலை காட்டி எதிரிகளை ஓடவிட்டார் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததா அது குறித்து இதுவரைக்கும் மருத்துவமனை கட்டி முடிக்கவில்லை இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய ஆட்சி திராவிட ஆட்சி முதலமைச்சர் பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என சொல்லுகிறோம் என்றால் அவர்களுக்காக அல்ல நமக்காக உங்களுக்காக தாய்மார்களுக்காக எனவே சிந்தியுங்கள் செயலாற்றுங்கள் நல்லதே நடக்கும் என பேசினார் கூட்டத்தில் திமுக திராவிடர் கழக மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story

