அம்மனுக்கு தண்ணீர் ஊற்ற இரவு முழுதும் காவிரி பாலத்தின் மீது பெண்கள் காத்திருப்பு  பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை

அம்மனுக்கு தண்ணீர் ஊற்ற இரவு முழுதும் காவிரி பாலத்தின் மீது பெண்கள் காத்திருப்பு  பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
X
பவானி மற்றும் குமாரபாளையம் அம்மனுக்கு தண்ணீர் ஊற்ற இரவு முழுதும் காவிரி பாலத்தின் மீது பெண்கள் காத்திருந்ததால் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன்,  மாரியம்மன் திருவிழா, பவானி செல்லியான்டியம்மன் திருவிழா ஆகியன துவங்கி நடந்து வருகிறது. இன்று ஒருநாள் மட்டும் பவானி செல்லியண்டியம்மன், குமாரபாளையம் காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு பெண்களே நேரடியாக தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்யலாம் என்பதால், பெண்கள் காவிரி பாலத்தின் மீது வரை நீண்ட வரிசையில் நேற்று இரவு 08:00 மணி முதல் நிற்க துவங்கினர். இதனால் காவிரி பழைய பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, நுழைவுப்பகுதியில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. வாகனங்கள் யாவும் பவானி புதிய பாலம் மற்றும் புறவழிச்சாலை பாலம் ஆகிய வழிகளில் சென்று வருகின்றன. இந்நிலை இன்று மதியம் 01:00 மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story