விண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது

X
ஆரணி அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார் உதவி ஆசிரியர் டிம்பிள் சோபியா அனைவரையும் வரவேற்றார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் மேற்பார்வையாளர் பாவை மேலாண்மை குழு தலைவி நித்யா சரஸ்வதி வேலு ஆகியோர் முன்னிலை வகுத்தனர் முன்னாள் மேற்குஆரணி ஒன்றிய குழு தலைவர் விண்ணமங்கலம் ஜெயராணி ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மாணவச் செல்வங்களுக்கு தான்படித்த பள்ளியின்பெருமையை கூறினார் கலை நிகழ்ச்சிக்குபின் பரிசுகள் வழங்கப்பட்டு பள்ளியின் உதவி ஆசிரியர் ஜெகன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது. .
Next Story

