திருச்சுழி அருகே பள்ளிக்குள் பாம்பு புகுந்ததால் மாணவிகள் பதறி ஓட்டம்.

X
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடையானம் பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி காட்டுப்பகுதி உள்ளதால் அடிக்கடி விஷ சந்துக்கள் விசிட் அடிப்பது வழக்கம். இந்நிலையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாம்பு இருப்பதாக சென்னை நவீன கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் பெறப்பட்டு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் குழுவினருடன் உடையானபட்டி அரசு பள்ளிக்கு சென்று பார்த்தபோது பள்ளியின் கழிவறையில் சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் லாவகமாக தீயணைப்பு துறையினர் பாம்பு பிடி கருவியின் மூலம் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டுச் சென்றனர். பாம்பைப் பார்த்த பள்ளி மாணவ மாணவிகள் பெரும் பதற்றத்தில் இருந்தனர் . பின்னர் பாம்பை பிடித்தவுடன் பதற்றம் தணிந்து வகுப்பு அறைக்குச் சென்றனர். பள்ளிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Next Story

