குடிப்பழக்கத்திற்கு ஆளான நபர் தூக்கிட்டு தற்கொலை

X
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பெரிய கட்டங்குடி பகுதியைச் சார்ந்தவர் பிரவீன் வயது 19 இவர் படிப்பு வராததால் அந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வந்ததாகவும், மது பழக்கத்திற்கு அடிமையான இவரை பெற்றோர் கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து மன வேதனையில் இருந்த பிரதீப் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பிரவீன் தந்தை முத்துப்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

