கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு எம்எல்ஏ பங்கேற்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இந்த நிகழ்ச்சி திருத்தணி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, ஆகிய மூன்று வட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இந்த நிகழ்ச்சி திருத்தணி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்வதற்காக கர்ப்பிணி பெண்களை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைத்த சமூக நலத்துறை அதிகாரிகள் கர்ப்பிணி பெண்கள் அமர்வதற்கு நாற்காலியில் கூட ஏற்பாடு செய்யாத அவலம் மேலும் அனைவரும் சமம் என்று கருதும் இந்த திமுக அரசு இந்த சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை போல் இருக்கிறது சொந்த நிதி இல்லை என்று கூறிக்கொண்டு சமுதாய வளைகாப்பு என்ற பெயரில் இதில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சீர்வரிசைகளை வழங்கி உள்ளனர் இதில் முக்கியமாக பாலிஸ்டர் சேலை, பனாரஸ் சேலை, ஜரிகை சேலை, பட்டு சேலை போல் மாதிரி சேலை, இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வழங்கியதால் கர்ப்பிணி பெண்கள் மனவேதனை அடைந்தனர் எங்களுக்கு இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பாரபட்சமான முறையில் கொடுப்பதற்கு பதிலாக நீங்கள் எதுவும் கொடுக்காமல் இருந்திருக்கலாம் இது போல் நிகழ்ச்சியும் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் இதுபோல் அனைவருக்கும் சமமாக கொடுக்காததால் சில கர்ப்பிணி பெண்கள் அதிகாரிகளிடத்தில் இந்த புடவைகளை மாற்றி கொடுங்கள் என்று முட்டி மோதிக்கொண்ட சம்பவம் இந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சமுதாய வளைகாப்பு என்ற பெயரில் அனைவரையும் சமமாக பார்க்காமல் கர்ப்பிணி பெண்களை ஓத வஞ்சனையுடன் தனித்தனியாக பிரித்து பார்த்து அவர்களுக்கு ஏற்றார் போல் சீர்வரிசை சேலைகளை வழங்கிய சம்பவம் இந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுபோல் மூன்று வட்டங்களை சேர்ந்த சமூக நலத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர் மேலும் இந்த துறைக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த போதிய நிதியையும் நல்ல மனசு உள்ள அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும் என்று கர்ப்பிணி பெண்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
Next Story