பொதுமக்கள் புகார் கூறியதால் கோழிப்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

X
தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையம் கிராமத்தில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையின் கழிவுகளில் உற்பத்தியாகும் ஈக்களால் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும், இங்கிருந்து வீசும் துர்நாற்றம் காற்றில் கலந்து குடியிருப்பு பகுதிகளில் உணவு சமைத்து உண்ண கூட தகுதி இல்லாத நிலையை ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சமைத்து வைக்கும் உணவில் நூற்றுக்கணக்கான ஈக்கள் விழுவதால் உணவை உண்ண முடியாத நிலை ஏற்படுவதோடு, கால்நடைகளின் குடிநீர் மற்றும் தீவனங்களுக்குள்ளும் விழுந்து கால்நடைகள் வளர்ப்பதற்கே சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கிராம மக்களின் தொடர் புகாரையடுத்து மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள் நேரில் வந்து கோழி பண்ணை யையும், கால்நடைகள் படும் சிரமங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
Next Story

