கட்டுமானப்பணி விரைந்து முடிக்கப்படும்

X
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் 139.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களைக் கொண்டு 35.18 ஏக்கர் பரப்பில் கட்டப்படும் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமனப் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை நேற்று நேரில் பார்வையிட்ட கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது: தரைதளத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பத்திரிக்கையாளர் அறை, மாவட்ட கருவூலம் உள்ளிட்ட அலுவலக அறைகள், முதல் தளம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தேர்தல் அலுவலகம், திட்ட இயக்குனர் அலுவலகம், வருவாய் அலுவலகங்கள். இரண்டாம் தளத்தில் டி.ஆர்.ஓ., அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல வாரியம், மாவட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட அறைகள்.மூன்றாம் தளத்தில் கலெக்டர் அறை, கூட்ட அரங்கம், காணொளிக் காட்சி அறை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கலந்தாய்வு அறை, எல்காட், என்.ஐ.சி., வருவாய்த் துறை அலுவலகம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகள் தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு உரிய திட்ட விதிமுறைகளின்படி விரைந்து முடித்து, திட்டமிட்ட காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Next Story

