மின் கம்பத்தில் மோதி  மெக்கானிக் பலி

மின் கம்பத்தில் மோதி  மெக்கானிக் பலி
X
பூதப்பாண்டி
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள அந்தரபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் கல்யாணி (36). இவர் மோட்டார் எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது அம்மாவுடன் வசித்து வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல் வேலைக்கு பைக்கில்  சென்றார். மாலை சுமார் 6.00 மணியளவில் கண்டளவு பகுதியில் சாலையோரமாக நின்ற மின் கம்பத்தில் மோதி இவர்கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.       அவரை அந்த வழியாக சென்றவர்கள் பார்க்கும் போது கல்யாணி இறந்து கிடப்பது தெரிந்தது. எப்பொழுது கீழே விழுந்துள்ளார் என்பது தெரியவில்லை. உடனே அப்பகுதியினர் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story