அரக்கோணத்தில் காணாமல் போன வடமாநில வாலிபர் மீட்பு

அரக்கோணத்தில் காணாமல் போன வடமாநில வாலிபர் மீட்பு
X
காணாமல் போன வடமாநில வாலிபர் மீட்பு
சத்தீஸ்கர் மாநிலம் தவங்கா ராமானுஜர் நகர் பகுதியை சார்ந்தவர் லட்சுமன்ரான் சிங் (வயது 28). இவர் தனது உறவினருடன் கேரள மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு கடந்த 26-ந் தேதி கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்துள்ளார். ரயில் இரவு 9.45 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற போது லட்சுமன் ரான் சிங் காணாமல் போனதாக கூறி அவரது மனைவி ரேணு மார்கம் அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று காட்பாடி ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த அவரை போலீசார் பிடித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரது மனைவி ரேணு மார்கத்தை வரவழைத்து அவரிடம் லட்சு மன்ரான் சிங்கை ஒப்படைத்தனர்.
Next Story