ஆற்காடு:காலாவதியான ‘கேக்’ சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி

X
ஆற்காடு அண்ணாசாலை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில் ஆற்காடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது 4 வயது மகனுடன் வந்து ஐஸ் 'கேக்' வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். அங்கு சிறுவன் ஐஸ்கேக் சாப்பிட்டதும் வாந்தி எடுக்க தொடங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், மகன் சாப்பிட்ட 'கேக்'கை பார்த்த போது அது கெட்டு போயிருப்பதும், காலாவ தியானதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த பேக்கரி கடைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பேக்கரி கடையை பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும் சிறுவனுக்கு வழங்கிய 'கேக்'கை ஆய்வுக்காக உணவு பாதுகாப் புத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

