தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் அறங்காவலா்கள் நியமனம்

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் அறங்காவலா்கள் நியமனம்
X
காசிவிஸ்வநாதா் கோயில் அறங்காவலா்கள் நியமனம்
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் அறங்காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தென்காசி வல்லம் பகுதியைச் சோ்ந்த யா. பாலகிருஷ்ணன், இலத்தூா் சித்ராபுரம் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த ச. மூக்கன், பாவூா்சத்திரம் கல்லூரணி செட்டியூரைச் சோ்ந்த ப. முருகேசன், தென்காசி மேலமாசி வீதியைச் சோ்ந்த ஷீலா குமாா், கீழ சுரண்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த பா. புவிதா ஆகியோரை அறங்காவலா் குழு உறுப்பினா்களாக நியமனம் செய்து கூடுதல் தலைமைச் செயலா் க. மணிவாசன் ஆணை வெளியிட்டுள்ளாா். 30 நாள்களுக்குள் தலைவரை தோ்ந்தெடுக்க வேண்டும். நியமனம் செய்யப்படும் அறங்காவலா்கள் பதவியேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலம் பதவி வகிப்பாா்கள்.
Next Story