நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புளிய மரம் ஏலம்

X
திருப்பத்தூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புளிய மரம் ஏலம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி உத்தரவின் பேரில் உதவிக் கோட்ட பொறியாளர் ஆதவன் மற்றும் உதவி பொறியாளர் நித்தியானந்தன் முன்னிலையில் பர்கூர் சாலை மற்றும் தர்மபுரி சாலை மற்றும் வெங்களாபுரம் ஏலகிரி கூட்ரோடு பகுதியில் சாலையை அகலப்படுத்த இடையூறாக இருந்த புளிய மரங்கள் ஏலம் விடுபட்டன. இந்த சேலத்தில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் டோக்கன் பெற்று கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சுமார் 2 லட்சம் மதிப்பில் புளிய மரம் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story

