ஏலகிரி மலையில் அத்தி முறையான மூதாட்டியை நகைக்காக கழுத்து நெரித்து கொலை செய்த தந்தை மகன் கைது! கொள்ளையடித்து வந்த எல்இடி டிவியால் கைது

ஏலகிரி மலையில் அத்தி முறையான மூதாட்டியை நகைக்காக கழுத்து நெரித்து கொலை செய்த தந்தை மகன் கைது! கொள்ளையடித்து வந்த எல்இடி டிவியால் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் அத்தி முறையான மூதாட்டியை நகைக்காக கழுத்து நெரித்து கொலை செய்த தந்தை மகன் கைது! கொள்ளையடித்து வந்த எல்இடி டிவியால் கைது! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை முத்தானூர் கிராமத்தை சேர்ந்த லேட் பச்சையப்பனின் மனைவி காந்தா (73) இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேரும் அத்தனாவூரில் வசித்து வருகின்றனர். ஆனால் காந்தா மட்டும் முத்தானூர் பகுதியில் தனிமையாக வசித்து வருகிறார் இதனை தொடர்ந்து கடந்த 4.2.25 ஆம் தேதி இரவு மூதாட்டி காந்தா தனிமையில் இருப்பதை நோட்டம் பார்த்து வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் காந்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த இரண்டேகால் சவரன் ‌ தங்க நகை, அவர் காலில் அணிந்திருந்த வெள்ளி காப்பு மற்றும் LED TV உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஜோலார்பேட்டை போலீசார் மண்டலவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக LED டிவியை வாலிபர் ஒருவர் கொண்டு வந்த போது அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததன் காரணமாக காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் ஆம்பூர் அடுத்த பணங்காட்டேரி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் தன்னுடைய அப்பா பெயர் சிவகுமார் (50) இருவரும் சேர்ந்து கடந்த நான்காம் தேதி இரவு தனது அப்பாவிற்கு அத்தி முறையான காந்தா வீட்டிற்கு சென்றதாகவும் மேலும் கழுதை நெறித்து இரண்டேகால் பவுன் நகையை பறித்து கொண்டு மூதாட்டியை கொலை செய்துவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட ‌ LED டிவி எடுத்துக்கொண்டு இரவு நேரத்தில் வர முடியாது என்ற காரணத்தால் மண்டலவாடி மலையடிவாரத்தில் வைத்து விட்டோம். ஒரு மாதம் கழித்து இன்று எடுத்துக்கொண்டு செல்லலாம் என்று வந்தபோது போலீசார் பிடித்து விட்டனர் என திடுக்கிடும் வாக்குமூலத்தை கொடுத்தார். இதன் காரணமாக ஏலகிரி மலைக்கு போலீசார் தந்தை சிவகுமார் மற்றும் அவருடைய மகன் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து செவ்வாய்க்கிழமை அன்று மூன்று மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story