ஊர் பொதுமக்களுக்கு தெரியாமல் மாரியம்மன் கோவில் பெயரில் அறக்கட்டளை வங்கி கணக்கு துவங்கி வெளிநாடுகளில் பண வசூல் செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகா
திருப்பத்தூர் மாவட்டம் ஊர் பொதுமக்களுக்கு தெரியாமல் மாரியம்மன் கோவில் பெயரில் அறக்கட்டளை வங்கி கணக்கு துவங்கி வெளிநாடுகளில் பண வசூல் செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்ட குப்பம் ஊர் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமையான இன்று நண்பகல் 12 மணியளவில் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர் அதில் கூத்தாண்ட குப்பத்தில் இருக்கும் மாரியம்மன் கோவில் பழுதடைந்து இருந்த காரணத்தால் அதனை ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி புதிதாக கட்டி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், சண்முகம், கோவிந்தராஜ், பச்சையப்பன், ராஜாமணி, சாமு, சசிகுமார், ராஜேந்திரன், ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர் எனவும் இதற்கு முழு காரணம் மாரியம்மன் கோவில் பெயரில் இவர்கள் அறக்கட்டளை தொடங்கி வெளிநாடுகள் மற்றும் வெளியூரிலிருந்து பணம் வசூல் செய்து அதனை பங்கு போட்டு பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் ஊர் பொதுமக்களுக்கு தெரியாமல் அறக்கட்டளை தொடங்கி பணத்தை பங்கு போட்டுக்கொள்வதால் ஊர் பொதுமக்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணத்தை கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற காரணத்தால் கோவிலை நாங்கள் கட்டுகிறோம் அதன் வேலையை எங்களிடம் கொடுங்கள் எனக்கூறி அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வருவதும் மேலும் கோவில் கட்ட தடையாக உள்ளனர் எனக் கூறியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
Next Story



