கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்

X
வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வடமதுரை ஒன்றியம் காணப்பாடி ஊராட்சி மாலை பட்டியில் புதிய நிழற்குடையை எம்எல்ஏ காந்திராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வடமதுரை மேற்கொன்றிய செயலாளர் சுப்பையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, அய்யலூர் பேரூரூர் செயலாளர் கருப்பன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு எம்எல்ஏ காந்திராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் வடமதுரை பேரூர் செயலாளர் மெடிக்கல் கணேசன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ ராஜகோபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

