புதூர் கிராமத்தில் சொத்து பிரச்சனை-குடும்பத்துடன் காவல் நிலையம் முன்பு தர்ணா
திருப்பத்தூர் மாவட்டம் புதூர் கிராமத்தில் சொத்து பிரச்சனை-குடும்பத்துடன் காவல் நிலையம் முன்பு தர்ணா திருப்பத்தூர் மாவட்டம் குரிசலபட்டு அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் விஜயகுமார் இவருக்கும் இவருடைய பெரியப்பாவான சங்கரபாணி மகன் ஞானமுத்துக்கும் இடையே ஏழு சென்ட் அளவிலான நில தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு விஜயகுமார் கடந்த 2019 ஆண்டு விற்பனை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து முருகன் அந்த இடத்திற்குச் சென்று வீடு கட்ட முயற்சி செய்யும்போது எல்லாம் ஞானமுத்து தடுத்து தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது மேலும் ஞானமுத்து இரண்டு முறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் அதன் தீர்ப்பு முருகனுக்கு சாதகமாக வந்துள்ளது. இருந்தபோதிலும் வீடு கட்ட விடாமல் ஞானமுத்து தடுத்து வருகிறார். இதன் காரணமாக முருகன் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் ஞானமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார் ஆனால் இதுவரை புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விஜயகுமார் குடும்பத்தினர் மற்றும் முருகன் ஆகியோர் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் இருதரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் உடனடியாக தங்களுக்கு உள்ள பத்திரப்பதிவுப்படி முறையாக அளந்து நிலத்தை பிரித்து கொள்ளுங்கள் அல்லது தவறு செய்ய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story



