சிவகங்கை நகரின் அவல நிலை - நகராட்சி நிர்வாகம் - எம்.எல்.ஏ - எங்கே எனக் கேள்வி

சிவகங்கை நகரின் அவல நிலை - நகராட்சி நிர்வாகம் - எம்.எல்.ஏ - எங்கே எனக் கேள்வி
X
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டி கழிவுநீர் கால்வாய் இடிந்த நிலையில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாகவும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி 19வது வார்டில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 19 வது வார்டுக்கு உட்பட்ட கௌதமர் தெருவுக்கு செல்லும் பாலம் இடிந்து சாக்கடை அடைபட்டு நிலையில் உள்ளது அதனால் அதிக கொசுக்களாலும் கழிவுநீர் துர்நாற்றத்தாலும் அப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது சிவகங்கையில் அனைத்து வார்டுகளும் தூய்மையாக இருக்கும் பொழுது 19 வது வார்டு தியாகி சேதுராமச்சந்திரன் தெரு, கௌதமர் தெரு செல்லும் பாதை மட்டும் ஏன் தீவாக ஒதுக்கப்பட்ட அவல நிலை என்றும், முறையாக நாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பாக்கி இல்லாமல் செலுத்தி வரும் நிலையிலும் எங்கள் பகுதி மட்டும் இவ்வாறு ஒதுக்கப்படுவதற்கு காரணம் தெரியவில்லை பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் முகம் சுளித்தபடியே அப்பகுதியை பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் சிவகங்கை நகருக்கு உள்ளே வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது அதே நேரத்தில் அமைச்சர் அவரது சொந்த தொகுதியான திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே கவனிப்பதாகவும், சிவகங்கையில் அதிமுக ஜெயித்ததால் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?என்ற கேள்வி எழுந்துள்ளது அப்பகுதியைச் சார்ந்த கவுன்சிலரோ தெருகளுக்குள்ளே செல்வதே இல்லை கவுன்சிலர் வீடு உள்ள பகுதி மட்டும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது அது எவ்வாறு என்று புரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story