சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி முருகன் கோவிலில் இணை அமைச்சர் சாமிதரிசனம்
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி முருகன் கோவிலில் தகவல் ஔிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சாமிதரிசனம் செய்தார் செவ்வாய்க்கிழமை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய வந்திருந்ததால் குடைகளை பிடித்தபடி நீண்ட வரிசையில் கடும் வெய்யிலும் காத்திருந்து தரிசனம் செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை தினமான நேற்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததால் நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக குடைகளை பிடித்தபடியும் கடும் வெய்யிலில் சாலைகளில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர் அப்போது தகவல் ஔிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அங்கு சாமி தரிசனம் செய்தார் பின்னர் சிறிது நேரம் கோவில் அமர்ந்து விட்டு அவர் வெளியே சென்ற போது பக்தர்கள் கூட்ட நெரிசலால் கோவிலுக்குள் செல்ல முயன்ற போது போலீசார் உரிய பாதுகாப்பு மேற்கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.
Next Story






