சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இந்தி திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டம்

சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இந்தி திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டம்
X
அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தி திணிப்பை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில், சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. அதன்படி வருகிற 8-ந்தேதி சேலம் வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோரிமேட்டில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அதேபோன்று 9-ந்தேதி சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டியிலும், 10-ந்தேதி மேற்கு தொகுதிக்குட்பட்ட கோட்டகவுண்டம்பட்டியிலும், 11-ந்தேதி ஓமலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கே.மோரூர் பகுதியிலும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டங்களில் சேலம் மத்திய மாவட்டம், மாநகரம், பகுதி, ஒன்றியம், கிளை, பேரூர் வார்டு பொறுப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து கண்டன பொதுக்கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் உறுதிமொழியை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story