சேலம் நெடுஞ்சாலை கோட்டத்தில்

X
சேலம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் சேலம் இரும்பாலை சாலையில் ஆவின் பால்பண்ணை அருகில் ரவுண்டானா அமைக்கும் பணியில் நடைபெற்ற தரக்கட்டுப்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் பார்வையிட்டார். ஒருங்கிணைந்த சாலை உட்கட்மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரும்பாைல சாலையில் ரூ.2 கோடியே 40 லட்சத்தில் மேம்பாடு செய்தல், சேலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்தல், பனமரத்துப்பட்டி சாலை ரூ.2 கோடியே 60 லட்சத்தில் அகலப்படுத்தி சாலை மேம்பாடு செய்தல் ஆகிய முடிவுற்ற பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தரம், கனம் சரிபார்க்கப்பட்டது. பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளைக்கோடு மற்றும் சாலை உபகரணங்களை உடனடியாக பொருத்த அறிவுறுத்தினார். மேலும் நடப்பாண்டில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க அவர் அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் முத்துகுமரன், உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

