அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த நகராட்சி தலைவர்

X
Komarapalayam King 24x7 |5 March 2025 3:30 PM ISTகுமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நகராட்சி தலைவர் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சி தலைவராக பதவியேற்று, நான்காம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில், ஸ்டாலின் பிறந்த நாளன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் விழா, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தலைமை டாக்டர் பாரதி தலைமையில் நடந்தது. இதில் கொத்துக்காரன்காடு பகுதியில் வசிக்கும், கூலித் தொழிலாளிகள் சபரிகிரி, கலைவாணி தம்பதியரின் பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சி தலைவரின் நான்காம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, தலைமை டாக்டர் பாரதி சால்வை அணிவித்து, புத்தகம் பரிசாக வழங்கினார். மருத்துவமனை பணியாளர்கள், கவுன்சிலர்கள், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறினர்கள்.
Next Story
