ஆம்பூர் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் வெகுவிமர்சையாக நடைப்பெற்ற எருதுவிடும் விடும் விழா*
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் வெகுவிமர்சையாக நடைப்பெற்ற எருதுவிடும் விடும் விழா இளைஞர்களின் ஆரவாரத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்* திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் இன்று காளை விடும் விழா நடைபெற்றது, இவ்விழாவினை விழாக்குழுவினர் உறுதி மொழி ஏற்று எருதுவிடும் விழாவை துவக்கி வைத்தனர், இந்த எருதுவிடும் விழாவில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திரமாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், கால்நடை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்கு பின் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு ஓடு பாதையில் இளைஞர்களின் மத்தியில் இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சத்து 25 ரூபாயும்,, 2ம் பரிசாக ₹75ஆயிரம் ரூபாயும் 3ம் பரிசாக ₹50 ஆயிரம் என தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட பரிசுகள் வெற்றிப்பெற்ற காளையில் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.. மேலும் இந்த எருதுவிடும் விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்..
Next Story



