கம்பம் பகுதியில் அதீத மது பழக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு

X
சீப்பாலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெரியபாண்டி(50). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் அதிகமாக மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(மார்ச்.4) அதிக அளவில் மது குடித்த பெரியபாண்டி கம்பம் பகுதியில் உள்ள தனியார் கடையின் முன்பு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய கம்பம் வடக்கு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

