முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற வாய்ப்பு

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற வாய்ப்பு
X
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள், அரசு இ-சேவை மையங்களில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தகுதிகள் உடைய பயனாளிகள் உரிய சான்றுகளுடன் அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதில், குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளாக, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, வருமானச் சான்று (குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்குள் இருத்தல் வேண்டும்), ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த சான்று (தாய் அல்லது தந்தை 35 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும்), இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தல் வேண்டும். (ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருந்தால் பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தல் வேண்டும்). மேலும், இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்று (பெற்றோர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்), சாதிச் சான்றிதழ், பெண் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் வயது சான்று, குடும்ப புகைப்படம், தாய் மற்றும் தந்தையின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய சான்றுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி மேற்குறிப்பிட்டுள்ள உரிய ஆவணங்களுடன், அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story