பைக் மீது வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு

பைக் மீது வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு
X
உயிரிழப்பு
கொடுவிலார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வலிங்கம்(32). இவர் திண்டுக்கல்லில் வேலை பார்த்து வந்த  நிலையில் தினமும் பைக்கில் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிய போது தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் எதிரே வந்த பிக்கப் வாகனம் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் (மார்ச்.4) வழக்குபதிவு செய்தனர்.
Next Story