பைக்கில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

பைக்கில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் சிதறால், அம்பலக்கடை பகுதியை சேர்ந்தவர் சிவன் பிள்ளை (67). இவரது மனைவி நிர்மலா (64). சம்பவத்தன்று நிர்மலா தனது மகன் சந்தோஷ என்பருடன் அவரது பைக்கில் திக்குறிச்சி என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். திக்குறிச்சி சிவன் கோயில் அருகே சென்றபோது நிர்மலாவுக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. இந்த நிலையில் பைக்கில் இருந்து அவர் தவறி கீழே விழுந்துள்ளார்.        இதில் பலத்த காயம் அடைந்த நிர்மலாவை அவர்  மகன் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நிர்மலா இன்று காலை  பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story