வாணியம்பாடி அருகே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிராத காரின் முன்பக்க டயர் கழன்றதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்து*
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிராத காரின் முன்பக்க டயர் கழன்றதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இரண்டு பேர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன் மற்றும் கோகுல் நண்பர்களான இருவரும் இன்று (05) காரில் வேலூருக்கு சென்றுவிட்டு மீண்டும் காரில் வீடுதிரும்பிய போது வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் முன்பக்க டயர் கழன்று ஓடியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது இதில் காரில் பயணம் செய்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்து, இவ்விபத்துகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் காரில் சென்ற போது திடீரென் டயர் கழன்று விழுந்து கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Next Story



