மகளிர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் ஹோப் டிரஸ்ட் இயக்குனர் திவ்யா செல்வத்திற்கு இந்திய அஞ்சல் துறை சார்பில் பாராட்டு

X
மகளிர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் ஹோப் டிரஸ்ட் இயக்குனர் திவ்யா செல்வத்திற்கு இந்திய அஞ்சல் துறை சார்பில் பாராட்டு வரும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மார்ச் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர்களுக்கு, இந்திய அஞ்சல் துறையின், ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் பரிசுகள் வழங்கி, சால்வை அணிவித்து கவுரவித்து வருகின்றனர். அதன்படி, பெரம்பலூரில் இயங்கி வரும் ஹோப் டிரஸ்ட் நிர்வாகி திவ்யா செல்வத்திற்கு, பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கித் கொடுத்து வருவதற்காகவும், போஸ்டல் சூப்பிரண்டு அப்துல் லத்தீப், போஸ்டல் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், போஸ்டல் அஞ்சல் துறையை சேர்ந்த ஊழியர்கள் சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து கவுரவித்தனர்.
Next Story

