திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்
X
திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர், மார்ச்.6- அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் மீன்சுருட்டியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எஸ் ஆர் முருகேசன், ஆ. தமிழ்மாறன், த. குணசீலன், சோ.ப.தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுபா. சவசந்தபகலவன் வரவேற்று பேசினார். மகளிரணி சமூக வளைதள பொறுப்பாளர் மருத்துவர் ப.மீ.யாழினி, தலைமை கழக இளம் பேச்சாளர் தீன்ஷா நூப், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.கூட்டத்தில் மாநில சட்ட திட்ட குழு இணைச் செயலாளர் சுபா சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.கூட்டத்தில் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.மணிமாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கலியபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் சிஆர்எம் பொய்யாமொழி,   ஜெயங்கொண்டம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி மற்றும் அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story