இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தமிழகத் தொழிலாளி : வடமாநில தொழிலாளிகள் அட்டூழியம்

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தமிழகத் தொழிலாளி : வடமாநில தொழிலாளிகள் அட்டூழியம்
தமிழகத் தொழிலாளியை தாக்கிய மூன்று வட மாநில தொழிலாளர்கள் மதுரவாயலில் கைது. மதுரவாயலில் கட்டுமான பணியின் போது தமிழக தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய மூன்று வட மாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே மதுரவாயலில் கூவம் ஆறு இடையே மேம்பாலம் கட்டும் பணி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த தனியார் நிறுவனத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரையன் (36) என்பவர் போரிங் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் தமிழர்களும் வடமாநிலத்தவர்களும் ஒன்றாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கடந்த மார்ச் இரண்டாம் தேதி இரவு பணி முடிந்து வீரையன் தூங்க சென்ற போது, வட மாநில தொழிலாளியான ஜீதுராம் நாயக் என்பவர் வீரையன் பாயை பயன்படுத்தி தூங்கியுள்ளார். இதனால் தனது பாயைய் தருமாறு ஜீதுராமிடம் வீரையன் கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி வீரையனை ஜீதுராம் தாக்கியுள்ளார். ஜீதுராமுடன் இணைந்து மேலும் இரண்டு வட மாநில தொழிலாளர்களும் இரும்பு கம்பியால் வீரையனை தாக்கியுள்ளனர். இதைக் கண்டு தமிழகத் தொழிலாளிகளான கங்காதரன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தடுத்துவிட சென்றுள்ளனர். அவர்களையும் மூன்று வட மாநில தொழிலாளிகளும் சேர்ந்து தாக்கி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த வீரையன் உட்பட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக வீரையன் மதுரவாயல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பி சென்ற மூன்று வட மாநில தொழிலாளர்களையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜீதுராம் நாயக் (32), கேதார் ராவுட் (32) மற்றும் சானியா நாயக் (28) என்பது தெரியவந்தது. பின்னர் மூவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story