கிழக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தும் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தும் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு கட்சித் தொண்டர்களின் ஆர்வம் மிகுதியால் பூ மத்தாப்பு பட்டாசு வெடித்தபோது கிரேனை சுற்றி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திருவள்ளூர் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தும் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு கட்சித் தொண்டர்களின் ஆர்வம் மிகுதியால் பூ மத்தாப்பு பட்டாசு வெடித்தபோது கிரேனை சுற்றி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் பெருவாயல் ஐயர் கண்டிகை சூரவாரி கண்டிகை உள்ளிட்ட பகுதியில் முதல்வர் 72 ஆவது பிறந்தநாள் விழாவானது கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்பு அறுசுவை உணவு வழங்கி கொண்டாடினர் சூரவாரி கண்டிகைப் பகுதியில் கிரேன் மூலம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்களுக்கு செண்டை மேளம் முழங்க மலர் தூவி கிரேன் மூலம் மாலை அணிவித்து வீரவாள் வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் பின்னர் அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கி முதல்வரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர் இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ஒன்றிய கழகச் செயலாளர் கி.வே ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்து சென்றபோது நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த கட்சியினர் ஆர்வ மிகுதியில் கிரேன் மூலம் மாலையை தங்களுக்கு அணிவிப்பது போன்று ட்ரோன் மூலம் படம் எடுத்தனர் அப்போது அவர்கள் எலக்ட்ரிகல் பட்டாசு வெடித்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு தூவப்பட்ட வண்ண பிளாஸ்டிக் சரகுகள் காற்றின் வேகத்தில் பட்டு தீப்பிடித்து மளமளவென எரிந்தது அதனை அவர்கள் அணிந்திருந்த சூ வினால் அழித்தும் தீ அணையாததால் அருகில் இருந்து (பக்கெட் )வாலியில் தண்ணீர் கொண்டு வந்து தீயை உடனடியாக அணைத்தனர் பின்னர் கிரேனை நகர்த்தி கொண்டு சென்று அனைவரும் ட்ரோன் மூலம் வீடியோவை பதிவு செய்தனர் திமுக தொண்டர்களின் ஆர்வம் மிகுதியால் சாலையில் தீடிரென தீப்பிடித்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது
Next Story