பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களே விபத்துக்கு காரணமான சம்பவம் நடைபெற்று உள்ளது

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களே விபத்துக்கு காரணமான சம்பவம் நடைபெற்று உள்ளது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கவரப்பேட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களே விபத்துக்கு காரணமான சம்பவம் நடைபெற்று உள்ளது. கவரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ரமேஷ் அதே காவல் நிலையத்தில் காவலராக பணி செய்பவர் மூர்த்தி. ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை கவரப்பேட்டை காவல் நிலையம் எதிரில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியினை திடீரென வழிமறித்து மடக்கி உள்ளனர். இதனால் நிலை தடுமாறிய வாகன ஓட்டுநர் சிவய்யா திடீரென சடன் பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி பின்னால் வந்த கட்டை லாரி ஒன்று பயங்கர சத்தத்துடன் கிரானைட் லாரி மீது மோதியது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது. சிதறி ஓடிய காவல்துறையினர் செய்வது அறியாது திகைத்து நின்றனர். பின்னர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்த கிரானைட் லாரி ஓட்டுநர் சிவய்யா அதே கவரப்பேட்டை காவல் நிலையத்தில் விபத்துக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட கவரைப்பேட்டை காவல் நிலையம் விபத்துக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் கவரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story