தனியார் கல்லூரியில் கூலித் தொழிலாளி இறப்பு குறித்து போலீஸ் அறிக்கை

தனியார் கல்லூரியில் கூலித் தொழிலாளி இறப்பு குறித்து போலீஸ் அறிக்கை
X
தங்கதுரை மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்களின் பிரேத பரிசோதனை மூலம் தெரியவருகின்றது
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் கீழ்செருவாய் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை(43) என்பவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார் கடந்த 02.03.2025 ஆம் ஆண்டு வேலைக்கு வந்தவர் நெஞ்சு வலி என்று கூறியதால் கல்லூரி வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேற்படி நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் தங்கதுரை மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்களின் பிரேத பரிசோதனை மூலம் தெரியவருகின்றது. ஆனால் மேற்படி சம்பவத்தை ஊடகங்களில் தவறாக சித்தரித்து செய்திகளை பரப்பி வருகின்றனர். வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
Next Story