பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் போராட்டம்
X
போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா அருகே தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாதவா்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்குக் கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் வ. ஆறுமுகம் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் எம். ராமலிங்கம், தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ஆா். இந்திராகாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story