காவல்துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு..

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி ஒருங்கிணைந்த அலுவலக கூட்டரங்கில், காவல்துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி ஒருங்கிணைந்த அலுவலக கூட்டரங்கில், காவல்துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால் தாமதமின்றி வழக்கு பதிவு செய்திட வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். கடந்த 2012ம் ஆண்டிலிருந்து இதுவரை 598 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 49 போக்சோ வழக்குகளின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதனை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தைத் திருமணம் தடைச்சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி ஆசிரியர்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு மூலம் விழிப்புணர்வு அதிகப்படுத்தி இதுபோன்ற குற்றங்களை தடுக்க அனைவரும் பணிபுரிந்திட வேண்டும். அனைத்து நியாய விலைக்கடைகள் மற்றும் பேருந்துநிலையங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எதிரான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை காட்சிப்படுத்தப்பட வேண்டும். மேலும், பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து விழிப்புணர்வை அதிகப்படுத்தப்பட வேண்டும். இதனைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குறித்த சட்டங்கள் குறித்து இன்று காவல்துறை அலுவலர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் திறன் வளர்ப்பு பயிற்சியானது நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருள்செல்வன், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, குழந்தை நலக்குழு தலைவர் திருமதி. பாலாம்பிகை, நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன் மற்றும் குழந்தைகள் சார்ந்து செயல்படும் அரசு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
Next Story