தாராபுரத்தில் ரத்ததான முகாம்

தாராபுரத்தில் ரத்ததான முகாம்
X
தாராபுரத்தில் ரத்ததான முகாம் 50 பேர் ரத்த தானம் செய்தனர்
தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் தி.மு.க. பேரூர் கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாராபுரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில் குமார் தலைமை தாங்கினார். தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கணேஷ், தாராபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, சின்னக் காம்பாளையம் பேரூர் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமில் தாராபுரம் அரசு மருத்துவர் சத்யராஜ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். ரத்ததானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Next Story