அரசு பள்ளியில் தொலைநோக்கியில் கோள்களை பார்வையிட்ட மாணவர்கள்

அரசு பள்ளியில் தொலைநோக்கியில் கோள்களை பார்வையிட்ட மாணவர்கள்
X
நத்தக்காடையூர் அரசு பள்ளியில் தொலைநோக்கியில் கோள்களை பார்வையிட்ட மாணவர்கள்
நத்தக்காடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விண்ணில் உள்ள சந்திரன், வியாழன் கோள்கள் இயங்கும் வழிமுறைகள், செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை மு. விஜயலட்சுமி தலைமை தாங்கி னார். தொடர்ந்து வானில் தோன்றும் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் கோள்கள் செயல்பாடுகள், பயன்பாடுகள், செவ்வாய் கிரகம் செயல்படும் வழிமுறைகள், கோள்களின் அணிவகுப்பு ஆகியவை பற்றி பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் தொலைநோக்கி கருவி மூலம் செவ்வாய், சந்திரன், வியாழன் கோள்கள் மற்றும் சந்திரனில் உள்ள மேடு, பள்ளங் களை ஆர்வமுடன் பார்வையிட்டு வியந்தனர். முடிவில் பள்ளி ஆசிரியர் த.அசோக்குமார் நன்றி கூறி னார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் க.நவனிகலா, சு. சரண்யா, விஜய் அமல்ராஜ், பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story