ஆம்பூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், எருதுவிடும் விழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்

ஆம்பூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், எருதுவிடும் விழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், எருதுவிடும் விழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள் 2 பேருக்கு கத்திகுத்து, படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி கத்தியுடன் இளைஞர் பொதுமக்களை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ - கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முருகன் மாட்டு வியாபாரியான இவரும் வாணியம்பாடியை சேர்ந்த பாபு என்பவரும் நண்பர்களான நிலையில், இருவருக்கும் இடையே மாடு விற்பனை தொடர்பாக பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது, இந்நிலையில் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் இன்று எருதுவிடும் விழா நடைப்பெற்றது, இந்த எருதுவிடும் விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், இந்த எருது விடும் விழாவை காண முருகனும், பாபுவும் வந்திருந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது, இந்நிலையில் இந்த தகராறில் முருகனுக்கு ஆதரவாக சென்ற ஆம்பூர் இராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்த குபேந்திரன் மற்றும் சதீஸ் ஆகிய இருவரை பாபு அங்கு தர்பூசணி கடையில் இருந்த கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார், மேலும் நவயோகன் என்பவரையும் பாபு தாக்கியுள்ளார், இதில் கத்துகுத்து ஏற்பட்டு குபேந்திரன் மற்றும் சதீஸை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அதனை தொடர்ந்து குபேந்திரனை மருத்துவர்கள் மேல்சிகிச்சையிற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, குபேந்திரன் மற்றும் சதீஸை கத்தியால் தாக்கிய பாபு என்பவரை தேடி வருகின்றனர்.. இந்நிலையில் பாபு எருதுவிடும் விழாவில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டும் வீடியோ தற்போது வெளியாகிய நிலையில் எருதுவிடும் விழாவில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர்களை கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
Next Story