கடையத்தில் எழுத்தறிவு திட்டம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் வட்டாரத்தில் இந்திய எழுத்தறிவு திட்டம் மற்றும் யுஎஸ்டி மென்பொருள் நிறுவனம் இணைந்து செயல்படுத்தி வரும் கிராமப் புற நூலக தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருமலையப்பபுரம் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற முகாமில் இந்திய எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் பாப்பு, யுஎஸ்டி. திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி பேசினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

