சேலம் சாமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் அரசு பஸ் இயக்கம்

X
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள சாமிநாயக்கன்பட்டி, மாங்குப்பை, நெருஞ்சிப்பட்டி, ஆகிய ஊராட்சி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும். மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் நிறுத்தத்திற்கு வர வேண்டும். இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு, செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜேந்திரன், ஆகியோரிடம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் லலிதா தலைமையில் பஸ் வசதி வேண்டும் என கோரிக்கை மனு அளித்த–ார். அதனை ஏற்று சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சாமிநாயக்கன்பட்டி வழியாக ஓமலூர் செல்லும் வகையில் பஸ் சேவை தொடக்க விழா சாமி நாயக்கன்பட்டியில் நடந்தது. இதில் ஓமலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வக்குமரன் மற்றும் பொதுமக்கள் புதிய பஸ் சேவையை கொடி அசைத்து வரவேற்றனர்.
Next Story

