அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டி

அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டி
X
போட்டி
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி, சிறுவங்கூரில் நடந்தது. இதில் சென்னை, கோயம்புத்துார், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் அணிகள் கலந்துகொண்டன. இதில் பெண்கள் பிரிவில் கள்ளக்குறிச்சி சிறுவை எஸ்.வி.ஆர் அணி முதலிடம் பிடித்தது. பொள்ளாச்சி அணி இரண்டாம் இடமும், அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணி மூன்றாம் இடமும், திருவண்ணாமலை அணி, நான்காம் இடமும் பிடித்தது.அதேபோல ஆண்கள் பிரிவில் திருச்சி முதலிடம் பெற்றது. அடுத்தடுத்த இடங்களை, சென்னை அம்பத்துார், கோயம்புத்துார் போத்தனுார், கடலுார் கோண்டூர் அணிகள் வெற்றி பெற்றன. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகை வழங்கினார்.
Next Story