குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட சாய் நவஜீவன் அறக்கட்டளை

X
திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அருள்புரம் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வந்தன. இந்த குப்பைகளை அகற்றி தூய்மை செய்யும் விதமாக சாய் நவ்ஜீவன் அறக்கட்டளை மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பிரிப்பதற்கான முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 150 வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 40 தெருக்களில் 4 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 5 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பிரித்து கொடுக்கப்பட்டது.மேலும் மகளிர் குழுக்கள், அறக்கட்டளை சார்பில் வீடு வீடாக சென்று நெகிழி குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் தட்கோ ரஞ்சித், சாய் நவ்ஜீவன் அறக்கட்டளை நிறுவனர் ஜெயபிரபா நவீன், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தகலா, பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், மதிமுக தமிழ்ச்செல்வன், ஆர் ஆர் ரவி மற்றும் கரைப்புதூர் ஊராட்சி முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். மேலும் சுகாதாரமான முன்மாதிரி கிராமமாக கரைப்புதூர் ஊராட்சியை மாற்றுவோம் எனவும் படிப்படியாக அனைத்து ஊராட்சிகளிலும் தங்களது சேவை தொடர்பு கொள்ளும் எனவும் நவஜீவன் அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

