தக்கலை புதிய பஸ் நிலையப் பணி கலெக்டர் பார்வையிட்டார்

தக்கலை  புதிய பஸ் நிலையப் பணி கலெக்டர் பார்வையிட்டார்
X
பத்மநாபபுரம்
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலைய பணிகளை நேற்று குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், -  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2023- 24 சார்பில் பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தக்கலை புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 6.39 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  அரசு மானியம் ரூ3.20 கோடி மற்றும் நகராட்சி பங்கு தொகை ரூ.  3.19 கோடி மதிப்பில் பணிகள்  நடைபெற்று வருகிறது.       இந்த பஸ் ஸ்டாண்டில் மொத்த பரப்பளவு 4359 சதுர மீட்டராகும். இதில் உணவு விடுதி, தாய்மார்கள் பால் ஊட்டும் அறை, நேர காப்பாளர் அறை, இலவச கழிப்பறை உள்ளிட்ட மேலும் 15 கடைகள் கட்டப்பட உள்ளது. பொதுப்பணித்துறை இந்த பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவருக்கு தெரிவித்தார்.        இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியாளர் வினய்குமார் மீனா, நகராட்சி ஆணையாளர் (பொ)ரமேஷ், துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story