குமரி : சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 

குமரி : சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 
X
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு நேற்று பணி நியமன ஆணையினை வழங்கி தெரிவிக்கையில்:-        இந்த முகாமில் 750 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டனர். இவர்களில் 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்களுக்கு பணிஆணை வழங்கப்பட்டது. பணியாணை பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறேன். மேலும் மற்றவர்கள் தொடர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். இவ்வாறு கூறினார்.        நிகழ்ச்சியில் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
Next Story